திருப்பூர் மாநாட்டில் விஜயகாந்த் பங்கேற்பு – தொண்டர்கள் உற்சாகம் !

Last Modified திங்கள், 9 செப்டம்பர் 2019 (09:03 IST)
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சமீபகாலமாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நிலையில் அடுத்த வாரம் நடக்கும் திருப்பூர் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளிநாடு சென்று தைராய்டு மற்றும் சிறுநீரகப் பிரச்சனைகளுக்கான சிகிச்சைகளை எடுத்து வந்தார். அதன் பிறகு அவர் கட்சி ரீதியான வேலைகள் எதிலும் அதிகமாக கலந்துகொள்ளவில்லை. ஓரிரு முறை கட்சி அலுவலகத்துக்கு வந்ததோடு சரி.

இதனால் அவரைக் காணாமல் தொண்டர்களும் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கட்சி பிரமுகர் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட அவரது மகன் விஜய பிரபாகரன் அடுத்த வாரம் திருப்பூரில் நடக்கும் மாநாட்டில் விஜயகாந்த் கலந்துகொள்வார் என அறிவித்துள்ளார்.

இதனால் தேமுதிக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். வரும் செப்டம்பர் 15ஆம் தேதி திருப்பூரில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடக்கிறது.இதில் மேலும் படிக்கவும் :