புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 11 அக்டோபர் 2021 (10:20 IST)

மனைவி மேல் சந்தேகம்… குழந்தைகளைக் கிணற்றில் வீசி கொன்ற கொடூர கணவன்!

கரூர் மாவட்ட்த்தில் குழந்தைகளைக் கிணற்றில் வீசிய நபர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பின்னர் தானும் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் மற்றும் பிரியா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கூலி வேலை செய்யும் முருகேசன் குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆனதால் அவருக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதையடுத்து பிரியா அடிக்கடி கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு செல்வதும் பின்னர் சமாதானமாகி கணவர் வீட்டுக்கு வருவதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் வழக்கம் போல குடித்துவிட்டு வந்த முருகேசன், மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். பின்னர் குழந்தைகள் இருவரையும் இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுவிட்டார். நீண்ட நேரமாகியும் திரும்பாததால் மனைவி அக்கம்பக்கத்தினரிடம் இதுபற்றி சொல்லியுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவர்களைத் தேட ஆரம்பித்துள்ளனர்.

மறுநாள் காலை பக்கத்து ஊரில் உள்ள விவசாயக் கிணற்றில் இருந்து உதவிக்கு யாரோ அழைக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்த சில அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தைகள் இருவரும் சடலமாக கிடக்க, இரும்புப் பைப்பை பிடித்துக்கொண்டு முருகேசன் தொங்கிக் கொண்டு இருந்துள்ளார். தீயணைப்புத்துறை மற்றும் போலிஸாருக்கு தகவல் சொல்லப்பட்ட நிலையில் அவர்கள் வந்து சடலங்களை மீட்டனர். முருகேசனையும் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் முருகேசன் மனைவி மேல் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் ஒரு கட்டத்தில் பயம் ஏற்படவே கம்பியை பிடித்துக்கொண்டு தன் உயிரை மட்டும் காப்பாற்றி இருக்கிறார் என்று தெரியவந்துள்ளது