செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 டிசம்பர் 2018 (15:49 IST)

கொலையில் முடிந்த தெருக்குழாய் சண்டை !

விருதுநகர் மாவட்டத்தில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அச்சம்தவிழ்த்தான் கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது நண்பர் கௌதமுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி என்பவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் கோயில் திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனையில் கௌதமுக்கு ஆதரவாக சுந்தரமூர்த்தி செயல்பட்டிருக்கிறார். இதனால் ஈஸ்வரமூர்த்திக்கும் சுந்தரமூர்த்திக்கும் பகை ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஒரே தெருவில் வசித்து வந்திருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் ஊரில் உள்ள பொதுத் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் மீண்டுமொரு பிரச்ச்னை உருவாகி கைகலப்பில் முடிந்துள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை தனது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த சுந்தரமூர்த்தியை ஈஸ்வரமூர்த்தியும் அவரது நண்பர்களும் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு உருவானது. இதையடுத்து ஈஸ்வரமூர்த்தியைக் கைது செய்துள்ள போலிஸார் விசாரனையில் ஈடுபட்டுள்ளனர்.