வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (10:21 IST)

கல்யாணத்திற்குப் பிறகு கணவனின் மாற்றம் – கேள்வி கேட்ட பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்!

முசிறியைச் சேர்ந்த ஜீவிதா என்ற கர்ப்பிணி பெண் தன் கணவனாலேயே கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

புல்லம்பாடியைச் சேர்ந்த ஜீவிதா என்ற பெண்ணுக்கும் மலேசியாவைச் சேர்ந்த எஸ்.கமல்காந்த் என்பவருக்கும் 7 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணத்துக்குப் பின்னர் திரும்பவும் மலேசியாவுக்கு செல்லாமல் கமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இங்கும் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். கணவர் வேலைக்கு செல்லாதது குறித்து ஜீவிதா கேள்வி கேட்க இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கமல்காந்த் மற்றும் ஜீவிதா

இதுபோல கடந்த 4 ஆம் தேதி மீண்டும் சண்டை வரவே கோபத்தில் கமல் ஜீவிதாவின் கழுத்தை நெறித்தும் அறுத்தும் கொலை செய்துள்ளார். பின்னர் ரத்தக் கரை படிந்த கையோடு அங்கிருந்து வெளியேறி தப்பிக்கப் பார்த்துள்ளார். அவரை அந்த கோலத்தில் பார்த்த அக்கம்பக்கத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலிஸார் கமல்காந்தை கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட ஜீவிதா மூன்று மாதம் கர்ப்பமாக இருந்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.