வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 5 பிப்ரவரி 2020 (18:03 IST)

கல்லூரி வாசலில் பெண்ணைத் தீவைத்துக் கொளுத்திய கொடூரன் !

அங்கிதா

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியை ஒருவரை அவர் பணிபுரியும் கல்லூரிக்கு வெளியே வைத்து ஒரு நபர் தீவைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அங்கிதா பிஸ்டே என்ற பெண் கல்லூரி ஒன்றில் பேராசிரியையாகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் எப்போதும் போல அவர் கல்லூரிக்கு சென்ற போது இரு தினங்களுக்கு முன்னர் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவர் மீது கெராசினை ஊற்றி தீயைப் பற்றவைத்து  விட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இதில் அங்கிதா உடலில் தீப்பற்ற அலறியபடி ஓடியுள்ளார்.

இதை அங்கிருந்த மக்கள் பார்த்து அதிர்ச்சியடைய நெருப்பை அணைக்க, போலீஸாருக்கு தகவல் சென்றுள்ளது. இதையடுத்து அங்கிதா ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பிகேஷ் நக்ரேல் என்பவரைக் கைது செய்துள்ள போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.