1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 15 மே 2020 (15:24 IST)

சாலையில் மயக்கம்போட்டு இறந்தவருக்கு கொரோனா- மருத்துவமனையில் சேர்த்தவர்களை தேடும் பணி!

சென்னையில் கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக நடந்து சென்று கொண்டு இருக்கும்போது மயக்கமடைந்த நபரை சிலர் ஆட்டோவில் கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள வி எம் தெருவில் கடந்த 12 ஆம் தேதி நடந்து சென்று கொண்டிருந்த ஒரு நபர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை அந்த பக்கத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் ஆட்டோவில் ராயப்பேட்டை பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாகவே அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்ற சோதனையை மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அவரின் சோதனை முடிவுகள் இன்று வரவே அவருக்கு கொரோனா பாஸிட்டிவ் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை கொண்டு வந்த சேர்த்தவர்களை தேடும் பணியை சுகாதார பணியாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.