செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 30 அக்டோபர் 2020 (10:55 IST)

வாட்ஸ் ஆப் மூலமாக சரக்கு டோர் டெலிவரி செய்த நபர் – மதுரையில் கைது!

மதுரை மாவட்டத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் வாட்ஸ் ஆப் மூலமாக சரக்குகளை டோர் டெலிவரி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேவர் குருபூஜையை முன்னிட்டு மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இன்று அந்த மாவட்டங்களில் கள்ள மார்க்கெட்டில் அதிக விலைக்கு சரக்கு பாட்டில்கள் விற்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் தங்கராமன் என்பவர் வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பினால் வீடு தேடி பாட்டில் வரும் என கூறி செய்தியைப் பரப்பியுள்ளார். இது சம்மந்தமாக போலீஸாருக்கு தகவல் சொல்ல அவர்கள் மதுபானம் வாங்குபவர் போல வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்பியுள்ளனர். தங்கராமன் சரக்கைக் கொடுக்க சென்ற போது அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து மதுபாட்டில்களையும் 14,000 மேற்பட்ட பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.