1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vijayashanthi says about lavanya suicide

மாணவி தற்கொலை விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் ஏன் மவுனமாக உள்ளார்: விஜயசாந்தி

லாவண்யா
மாணவி லாவண்யா தற்கொலை விஷயத்தில் முதல்வர் ஏன் மௌனமாக உள்ளார் என நடிகையும் முன்னாள் தெலுங்கானா எம்பியுமான விஜயசாந்தி கேள்வி எழுப்பி உள்ளார்
 
அரியலூரில் லாவண்யா என்ற மாணவி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தை பாஜக கையிலெடுத்து அரசியலாக்கி வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தெலுங்கானா முன்னாள் எம்பியும் நடிகையுமான விஜயசாந்தி இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது மாணவி தற்கொலை மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் மதத்தை மாற்றக்கோரி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்துவது என்றும் தெரிவித்துள்ளார்
 
இந்த விவகாரத்தில் பாஜக மதத்தை வைத்து ஓட்டு வாங்க அவசியம் இல்லை என்றும் மாணவி இறப்பதற்கு முன்பே பேசிய வீடியோவை பார்த்து உள்ளது என்றும் கூறினார்
 
மேலும் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் ஏன் பேசவில்லை? ஏன் மவுனமாக இருக்கிறார்? இந்துக்கள் ஓட்டு வேண்டாமா மாணவி இறப்புக்கு மதமாற்றம் காரணமில்லை என ஏன் திசை திருப்புகின்றனர்? என்ற கேள்வியையும் அவர் எழுதியுள்ளார்
 
 
About Writer
Mahendran