திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 22 செப்டம்பர் 2022 (16:42 IST)

மாம்பலம் ரெயில் நிலையம் - தி.நகர் பஸ் நிலையம் இடையே ஆகாய நடை மேம்பாலம்: பயணிகள் மகிழ்ச்சி

mambalam
மாம்பலம் ரெயில் நிலையம் - தி.நகர் பஸ் நிலையம் இடையே ஆகாய நடை மேம்பாலம்: பயணிகள் மகிழ்ச்சி
மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து தி.நகர் பஸ் நிலையம் வரை ஆகாய மேம்பாலம் அமைக்கப்பட்டதை அடுத்து பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
சென்னையின் முக்கிய பகுதியான தி நகரில் இருந்து மாம்பலம் ரயில் நிலையம் செல்ல வேண்டுமென்றால் நெருக்கடியான ரங்கநாதன் தெரு வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பயணிகள் மிகவும் திக்கு முக்காடினார் 
 
இந்தநிலையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து திநகர் பஸ் நிலையம் வரை பாதசாரிகளை பரவசப்படுத்தும் வகையில் நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் எஸ்கலேட்டர், லிப்ட் போன்ற வசதிகளுடன் இந்த நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருவதை அடுத்து விரைவில் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது
 
இதனால் ஏராளமான பயணிகள் மற்றும் தி நகர் வரும் மக்கள் பயனடைவார்கள் என்றும் ரங்கநாதன் தெருவை இனிமேல் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் கூறப்படுகிறது
 
2020 ஆம் ஆண்டு நாட்கள் ராட்சச தூண்கள் எழுப்பப்பட்டு நடை மேம்பாலம் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் விரைவில் இந்த பணிகள் முடிவடைய இருப்பதாகவும் இதில் லிப்ட் வசதியும் ஏற்படுத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.