1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 செப்டம்பர் 2022 (15:53 IST)

இயக்குனரின் பர்த்டே பார்ட்டிக்காக ஷுட்டிங்குக்கு மட்டம் போட்ட விஜய் சேதுபதி!

இயக்குனர் மிஷ்கினின் பிறந்தநாள் சமீபத்தில் சென்னையில் கொண்டாடப்பட்டது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் மிஷ்கின். அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் மிஷ்கினின் 50 ஆவது பிறந்தநாள் சென்னையில் கலையுலக மற்றும் இலக்கிய உலக பிரமுகர்கள் சூழ நடந்தது. அதில் கலந்துகொள்வதற்காக விஜய் சேதுபதி தான் நடிக்க இருந்த இந்தி பட ஷூட்டிங்கில் இருந்து விடுப்பெடுத்து வந்து கலந்துகொண்டார் என்று சொல்லப்படுகிறது.