ஆகஸ்ட் 5 முதல் மக்களை தேடி வரும் மருத்துவம் திட்டம்: அமைச்சர் தகவல்

ma subramanian
ஆகஸ்ட் 5 முதல் மக்களை தேடி வரும் மருத்துவம் திட்டம்: அமைச்சர் தகவல்
siva| Last Updated: ஞாயிறு, 1 ஆகஸ்ட் 2021 (16:49 IST)
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பதும் மக்கள் நலத் திட்டங்களால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
அந்த வகையில் ஏற்கனவே மக்களை தேடி வரும் மருத்துவம் என்ற திட்டம் விரைவில் அமல் படுத்தப் படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 5 முதல் மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் மாவட்டத்திலுள்ள சமணப்பள்ளி என்ற பகுதியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் அடுத்த 6 மாதங்களில் ஒரு கோடி பேர் பயனடைவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்இதில் மேலும் படிக்கவும் :