1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 23 நவம்பர் 2023 (18:49 IST)

திருவண்ணாமலை தேரோட்டத்தின்போது விபரீதம்: மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு

மிகவும் புகழ்பெற்ற திருவண்ணாமலை தேரோட்டம் இன்று நடைபெற்ற போது திடீரென பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 
 
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திற்கு முன்பு தேரோட்டம் நடைபெறும் என்பதும் இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை தேரோட்டம் நடந்த போது திடீரென தேரின் அருகில் இருந்த கடையிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பக்தர்கள் சிலர் மீது மின்சாரம் பாய்ந்ததால் காயம் ஏற்பட்டதாகவும் இது குறித்து தகவல் அடைந்த காவல்துறையினர் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி பக்தர்களை மீட்டதாகவும் தெரிகிறது. 
 
இந்த நிலையில் காயமடைந்த பக்தர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் யாருக்கும் ஆபத்து இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
Edited by Siva