திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (12:09 IST)

ஸ்டாலின் கைது குறித்த ஆதாரங்களை வெளியிடுவேன்: மாஃபா பாண்டியராஜன்

மிசா காலத்தில் ஸ்டாலின் கைது குறித்து பேசிய அதிமுக அமைச்சர் அதை ஆதாரத்தோடு நிரூபிப்பதாக கூறியிருக்கிறார்.

எமெர்ஜென்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் ஸ்டாலின் இல்லை என்று அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேசியது திமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியது. மாஃபாவை எதிர்த்து பல்வேறு இடங்களில் திமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உருவ பொம்மையை கொளுத்து தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் திமுகவினருக்கு வேண்டுகோள் விடுத்த ஸ்டாலின் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டாம் என கூறியிருந்தார். இதனால் மேலும் சில இடங்களில் நடைபெற இருந்த போராட்டங்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ”ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை என்பதால் சந்தேகம் எழுப்பினேன். மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்பேன். இதுகுறித்து திமுக தலைவருக்கு இரண்டு நாட்களில் பதில் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.