திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2019 (11:52 IST)

வெங்கடாசலபதிக்கு போட்டியாக களமிறங்கும் மதுரை மீனாட்சி..

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில், திருப்பதியை போல பிரசாதமாக லட்டு வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார் முதல்வர்.

தமிழகத்தில் மதுரையில் அமைந்திருக்கும் மீனாட்சி அம்மன் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆன்மீக திருத்தலமாகும். இந்த கோவிலுக்கு பல மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் திருப்பதி கோவிலை போன்று பக்தர்களை மகிழ்விக்க தினமும் பிரசாதமாக லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக லட்டு தயாரிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டன. ஒரு மணி நேரத்தில் 3000 லட்டுகள் வரை தயார் செய்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து காணொலி மூலம் திறந்துவைத்தார். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு லட்டு விநியோகம் செய்யப்பட்டது. லட்டு தயாரிப்பிற்காக 15 பேர் கொண்ட குழு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மேலும் தினமும் மீனாட்சியை தரிசிக்க வருகை தரும் பக்தர்களுக்கு அம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் இலவச லட்டு வழங்கப்படுவது கூடுதல் தகவல்.