செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (22:15 IST)

மோடி ரசிகரை திருமணம் செய்து சித்ரவதைக்கு ஆளாகிய இளம்பெண்

சமூக வலைத்தளங்களில் மோடியின் தீவிர ரசிகர் என அறியப்பட்டு அந்த ரசிகரை அதே மோடியின் ரசிகையாக இருந்த ஒரு இளம்பெண் திருமணம் செய்து தற்போது சித்ரவதைக்கு உள்ளாகிய அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

குஜராத்தை சேர்ந்த 'ஜெய் தேவ்' என்ற மோடி ரசிகரை சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து அவரோடு பழகி அதன்பின் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அவரை திருமணமும் செய்து கொண்டார் அல்பிகா பாண்டே என்ற ஒரு இளம்பெண். மோடியின் ரசிகர்களான இந்த ஜோடிக்கு மோடியின் ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்,.

இந்த நிலையில் 'அல்பிகா பாண்டே' தற்போது தனது கணவர் குறித்து திடுக்கிடும் தகவல் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தனது கணவர் மோடியின் ரசிகர் என்பது ஒருபக்கம்தான் என்றும் அவருடைய இன்னொரு பக்கம் சரியான சந்தேகப்பேர்வழி என்றும் தான் பாத்ரூம் போனால் கூட சந்தேகப்படுவதாகவும் பதிவு செய்துள்ளார். தனக்கு வீட்டை விட்டு எங்கும் செல்ல அனுமதி இல்லை என்றும், தனது சுயவிளம்பரத்திற்காக இந்த திருமணத்தை அவர் செய்து கொண்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ள நிலையில் காவல்துறையினர் அல்பிகா பாண்டேவின் கணவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.