மாநில எல்லைகளை மத்திய அரசு சீல் வைத்து விட்டது – முதல்வர் பழனிசாமி !

palanisamy cm
sinoj| Last Modified செவ்வாய், 31 மார்ச் 2020 (00:23 IST)

கொரோனா வைரஸால் இந்தியா முழுவதும்
ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு புலம் பெயர்ந்தோர் சொந்த ஊருக்கு வர முயற்சித்து கொண்டுள்ளனர். சமீபதித்தில் கூட உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள் கால்நடையாக நடந்தேகூட சென்றனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


அவர்களுக்கு பேருந்து வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என பலரும் அச்சம் தெரிவித்தனர்.

இதுகுறித்து தமிழக முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது , மாநில எல்லைகளை மத்திய அரசு சீல் வைத்து விட்டது. எனவே அந்தந்த மாநிலத்தில் இருக்கிற தொழிலாளர்கள், தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு தொழில் செய்ய போனவர்களுக்கு அங்கேயே தேவையான வசதிகளை அம்மாநிலமே செய்து கொடுக்கும். இதை மத்திய அரசும் தெளிவுப்படுத்தி விட்டது. #Corona #lockdown

மேலும், இறப்பு மற்றும் திருமணம் ஆகியவற்றிற்காக வெளியூர் செல்ல அனுமதி அளிக்கப்படும். யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால், மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளிக்கப்படும். மற்ற எதற்கும் கிடையாது. எல்லோரும் வெளியே செல்ல வேண்டுமெனில் அதற்கு 144 தடை உத்தரவு போடவேண்டிய அவசியமே இல்லை. #Lockdown21என தெரிவித்துள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :