புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 8 மே 2020 (12:03 IST)

மதுரைன இனி மல்லி இல்ல மது தான்: விற்பனையில் டாப்பு டக்கர்!!

டாஸ்மாக் மூலம் நேற்று எவ்வளவு வசூல் ஆனது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 
 
அதன்படி, நேற்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு ஆண், பெண் என இல்லாமல் விற்பனை அமோகமாக நடந்தது. சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. 
 
இந்நிலையில் டாஸ்மாக் மூலம் நேற்று எவ்வளவு வசூல் ஆனது என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சென்னை நீங்கலாக தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் ரூ.172.59 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மாவட்ட வாரியாக பார்க்கையில் ரூ.46.78 கோடி மது விற்பனையுடன் மதுரை முதலிடத்தை பிடித்துள்ளது. இது வேதனையளிக்கும் விஷ்யமாக இருந்தாலும் இதனால் தமிழக அரசுக்கு ஒரு நாளில் ரூ.172.59 கோடி வருமானம் வந்துள்ளது என்பதே உண்மை. 
 
ஆனாலும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விட டாஸ்மாக் விற்பனைகளில் அதிகமாக கவனம் செலுத்துவதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.