1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 7 பிப்ரவரி 2018 (07:45 IST)

மதுரை பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமான பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.
தமிழகத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள கடைகளில் கடந்த 2 ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
 
இந்நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில், எரிந்து சேதமான பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை நேற்று இரவு திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கனவே அப்பகுதியில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்படும்  தொடர் விபத்துகளால் மக்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.