தொடர்புடைய செய்திகள்
- அரசியலில் இருந்து விலகுகிறாரா கமல்ஹாசன்? – மக்கள் நீதி மய்யம் விளக்கம்!
- தடுப்பூசி போடவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை: சுகாதார இயக்குனர் எச்சரிக்கை!
- 1 லட்சத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு; 2 ஆயிரமாக உயர்ந்த தினசரி பலி! – இந்தியாவில் கொரோனா!
- தடுப்பூசி போடாவிட்டால் வெளியே வர அனுமதியில்லை! – புதுச்சேரி அரசு அதிரடி!
- 26.57 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
சிங்கப்பூரிலிருந்து மதுரை வந்தவருக்கு கொரோனா! ஒமிக்ரானா என பரிசோதனை!
தமிழகம் முழுவதும் ஒமிக்ரான் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து வந்தவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரான் உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்நிலையில் ஒமிக்ரான் பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பரிசோதனை மற்றும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து மதுரை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவருக்கு சாதாரண கொரோனாவா அல்லது ஒமிக்ரான் பாதிப்பா என்பதை கண்டறிய அவர் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
