1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy Rain Alert for Seven Tamil Nadu Districts; Disaster Management Issues Warning

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

Rain
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள மாவட்டங்களில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த ஆறு நாட்களுக்கு கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
 
இந்த ஏழு மாவட்டங்களிலும் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு என பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேற்கண்ட ஏழு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மைத் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தி உள்ளது. "அதிக கனமழையை எதிர்கொள்வதற்கான நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும் என்றும்," பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!