1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 டிசம்பர் 2021 (10:44 IST)

பகத் சிங் கெட்டப்பில் அஜித்… அடங்காத அஜித் குருப்ஸின் சேட்டை!

நடிகர் அஜித் ரசிகர் மன்றங்களை எல்லாம் கலைத்துவிட்டு தான் உண்டு தன் படங்கள் உண்டு என இருந்துவருகிறார்.

ஆனாலும் அவரின் ரசிகர்கள் அவ்வப்போது கட் அவுட் வைப்பது, வித்தியாசமாக போஸ்டர் அடிப்பது என ஏதாவது ஒன்றை செய்து சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றனர். இந்நிலையில் இப்போது மதுரையைச் சேர்ந்த அடங்காத அஜித் குருப்ஸை சேர்ந்தவர்கள் அஜித்தை பகத் சிங் கெட்டப்பில் போட்டு வைத்துள்ள ஒரு போஸ்டர் இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

இது சம்மந்தமாக இணையத்தில் விமர்சனங்களும் கேலிகளும் உருவாக ஆரம்பித்துள்ளன. விரைவில் அஜித்தின் வலிமை திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் மேலும் இதுபோல பல கட் அவுட் மற்றும் போஸ்டர்கள் வெளியாக வாய்ப்புள்ளது.