வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

மதுரையில் இன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு அனுமதி

meenakshi marriage
மதுரையில் இன்று மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்களுக்கு அனுமதி
மதுரையில் சித்திரை திருவிழா கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்று சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது
 
இன்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்
 
எனவே மக்கள் நீண்ட வரிசையில் நின்று மீனாட்சி திருக்கல்யாணம் நிகழ்வை காண ஆர்வத்துடன் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் தொலைக்காட்சிகளிலும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்ப மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது