ஞாயிறு, 9 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 பிப்ரவரி 2025 (09:09 IST)

மாயமான அமெரிக்க விமானம் கண்டுபிடிப்பு.. பயணம் செய்த 10 பேரும் உயிரிழப்பு..!

Flight
அமெரிக்காவில் 10 பேர் பயணம் செய்த சிறிய விமானம் ஒன்று நேற்று மாயமானதாக கூறப்பட்ட நிலையில், அந்த விமானம் கடலில் உள்ள பனி பாறையில் விழுந்து நொறுங்கியதாகவும், அதில் பயணம் செய்த 10 பேரும் பரிதாபமாக பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இருந்து, சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று நோம் நகருக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில்  விமானி உள்பட 10 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில், திடீரென அந்த விமானம் ரேடார் தொடர்பை இழந்ததாகவும், மாயமான அந்த விமானத்தை தேடும் முயற்சியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

இதனிடையே நோம் நகரின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கடலில் 55 கிலோமீட்டர் தொலைவில், தற்போது அந்த விமானம் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் பயணம் செய்த 10 பேரும் உயிரிழந்ததாகவும், பலியானவர்கள் விவரம் குறித்து தகவல் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


Edited by Siva