1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 8 டிசம்பர் 2020 (16:48 IST)

ராஜராஜ சோழன் சமாதி: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

ராஜராஜ சோழன் சமாதி: மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
தஞ்சை பெரியகோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழனின் சமாதி கேட்பாரின்றி இருப்பதாகவும் சிதைவடைந்த நிலையில் இருப்பதாகவும் அதை பராமரித்து சமாதி உள்ள இடத்தில் மணிமண்டபம் கட்டி அதை அனைவரும் பார்த்து அறியும் விதமாக சுற்றுலா தலமாக அறிவிக்கவேண்டும் என்றும் வழக்கறிஞர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது/ இன்றைய விசாரணையின்போது ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ராஜராஜசோழன் சமாதியில் மணிமண்டபம் கட்ட அனுமதி அளிக்க கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பினார் 
 
மேலும் இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பதில் அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது