செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 டிசம்பர் 2023 (16:12 IST)

சென்னையை போன்று மதுரையை மாற்றிவிடாதீர்.. மதுரை ஐகோர்ட் கண்டிப்பு..!

சென்னையை போன்று மதுரையை மாற்றி விடாதீர்கள் என மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 
 
சட்ட விரோதமாக கட்டுமானம் கட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்டவிரோத கட்டுமானம் தொடர்பாக, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும்  மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  
 
அனுமதியற்ற கட்டடங்களை அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம், ஆனால் நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது என்றும்,  முறையற்ற கட்டிடங்களால் சென்னை போன்று மதுரையையும் மாற்றி விடக்கூடாது என்றும் அனுமதி ஏற்ற கட்டிடங்களால் மக்கள் மக்கள் நிம்மதியற்ற வாழ்க்கை வாழ நேரிடுகிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.  
 
மதுரை மாநகராட்சியில் சட்டவிரோதமான கட்டுமானங்கள் கட்ட  அதிகாரிகள் அனுமதித்துள்ளனர் என்றும் மதுரை விளாங்குடியில் சட்டவிரோத கட்டடங்களை அகற்றக்கோரி மதன் குமார் என்பவர் தொடுத்த வழக்கில் தான் நீதிபதிகள் மேற்கண்ட கருத்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran