செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 4 ஜனவரி 2022 (18:50 IST)

மசாஜ் செண்டரில் சிசிடிவி: தனிமனித உரிமையை பாதிக்கும் என ஐகோர்ட் கருத்து!

மசாஜ் செண்டரில் சிசிடிவி: தனிமனித உரிமையை பாதிக்கும் என ஐகோர்ட் கருத்து!
மசாஜ் சென்டரில் சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என்பது குறித்த வழக்கு விசாரணையின்போது தனிமனித உரிமையை பாதிக்கும் என மதுரை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
மசாஜ், ஸ்பா போன்ற இடங்களில் முறைகேடுகள் நடைபெறுவதை அடுத்து சிசிடிவி கேமராக்கள் வைக்க வேண்டும் என்று வழக்கு ஒன்று மதுரை ஐகோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது
 
இந்த வழக்கு விசாரணை நடந்தபோது மசாஜ் சென்டர் மற்றும் ஸ்பா போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைப்பது தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கும் என்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை கருத்து தெரிவித்துள்ளது 
 
மேலும் மசாஜ் சென்டர்களில் கேமராக்கள் வைப்பது உச்சநீதிமன்ற விதிகளுக்கு எதிரானது என்று மதுரை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.