செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 23 டிசம்பர் 2021 (08:44 IST)

தள்ளுவண்டியில் இறந்த விழுப்புரம் சிறுவனை தூக்கி வந்தது யார்? வைரலாகும் சிசிடிவி வீடியோ

தள்ளுவண்டியில் இறந்த விழுப்புரம் சிறுவனை தூக்கி வந்தது யார்? வைரலாகும் சிசிடிவி வீடியோ
சமீபத்தில் விழுப்புரம் பகுதியில் தள்ளுவண்டியில் 5 வயது சிறுவன் ஒருவன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் பசியால் அந்த சிறுவன் இறந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
 
இந்த நிலையில் சிறுவன் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் இரண்டு வடமாநிலத்தவர்கள் அந்த சிறுவனை தூக்கி வந்து தள்ளு வண்டியில் போட்டுவிட்டுச் என்ற காட்சி உள்ளது
 
இதனை அடுத்து அந்த வடமாநிலத்தவர்கள் யார்? குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களா? எதற்காக தள்ளுவண்டியில் போட்டு விட்டுச் சென்றார்கள்? என்பது குறித்த விசாரணையை காவல்துறையினர் முடுக்கி விட்டுள்ளனர்
 
மேலும் சிறுவனை இதுவரை சொந்தம் கொண்டாடி யாரும் வராததால் காணாமல் போனதாக  அளிக்கப்பட்ட புகார்களையும் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது