பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பவர்களை கைது செய்யலாம்: உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
பட்டியலின மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பவர்களை கைது செய்யலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மங்கள நாடு வழக்கு என்ற கிராமத்தைச் சேர்ந்த அம்மன் கோவிலில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் அந்த கோவிலுக்கு சென்று வழிபடவும் திருவிழாவில் பங்கேற்கவும் அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகள் ஆகியும் பட்டியலின மக்களை கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுப்பது தலை குனிய வேண்டிய விஷயம் என்றும் பட்டியல் இன மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க முடியாது என்று கூறுபவர்களை கைது செய்யவும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டத் தடுப்புச் சட்டத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Edited by Siva