திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023 (09:13 IST)

மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை.. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்ட  நிபந்தனைகளுக்கு மத்திய மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
மதுபான விற்பனை நேரத்தை குறைக்க வேண்டும் என்றும் மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே மதுபானங்களை விரும்ப வேண்டும் என்றும் ஏற்கனவே நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் மதுபானம் விற்பனை தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது. அந்த உத்தரவில் மதுபான விற்பனை நேரத்தை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை குறைக்க வேண்டும் என்றும் மது வாங்குபவர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விற்க வேண்டும் என்றும்  நீதிமன்றம் கூறியுள்ளது. 
 
இதற்கு மத்திய மாநில அரசுகள் என்ன பதில் அளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva