திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

பாஜகவில் இருந்து விலகுகிறேன்: மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அறிவிப்பு!

bjp saravanan
பாஜகவில் இருந்து விலகுகிறேன்: மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அறிவிப்பு!
பாஜகவில் இருந்து விலகுகிறேன் என மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் அவர்கள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நேற்று தமிழக நிதியமைச்சர் பியூட்டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது பாஜகவினர் அவரது கார் மீது செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது 
 
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளதாகவும் 24 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன
 
 இந்த நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக இருந்து விலகுகிறேன் என அக்கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
அது மட்டுமன்றி மதுரையில் நடந்த சம்பவத்திற்கு நிதியமைச்சர் பிடிஆர்ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை சந்தித்து மன்னிப்பு கோரினார். மேலும் பாஜகவின் மத வெறுப்பு அரசியலில் தொடர விரும்பவில்லை என்றும் அதனால் அக்கட்சியில் இருந்து விலகுகிறேன் என்றும் அறிவித்துள்ளார். அவரது அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது