1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madras university exams are postponed

அண்ணா பல்கலையை அடுத்து சென்னை பல்கலையின் தேர்வு தேதி மாற்றம்.. புதிய தேதி அறிவிப்பு..!

Madras University
புயல், கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தேதி மாற்றப்பட்ட நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகத்தின் பருவ தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை பல்கலைக்கழகத்தின் பருவ தேர்வுகள் டிசம்பர் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற இருந்த நிலையில் அந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு இருந்த அறிவிப்பு வெளியானது. 
 
இந்த நிலையில் பருவ தேர்வுகளின் புதிய தேதியை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி டிசம்பர் 4ஆம் தேதி தொடங்க வேண்டிய பருவ தேர்வுகள் டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கும் என்றும் இந்த தேர்வுகள் டிசம்பர் 16ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முன்னதாக மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 4 ஆம் தேதி நடைபெறவிருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ரூ. 5 லட்சம் வரை UPI பரிவர்த்தனை - ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு!