செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (07:56 IST)

மாதவரத்தில் கட்டுக்கடங்காத தீ –மீட்புப் பணியில் 500 வீரர்ர்கள் !

மாதவரம் ரசாயணக் கிடங்கு தீ விபத்துப் பகுதி

மாதவரத்தில் உள்ள ரசாயண கிடங்கில் தீ பற்றியதை அடுத்து அதை அணைக்கும் பணியில் 500 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த தீயை அணைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த தீயை அணைக்க முடியாமல் இரண்டாவது நாளாக இன்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இந்த பணியில் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். ரசாயணக் கிடங்குக்கு அருகில் பெட்ரோல் பங்க் வேறு இருப்பதால் தீ மேலும் பரவாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதியில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.