1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified சனி, 29 பிப்ரவரி 2020 (18:44 IST)

கொளுந்து விட்டு எரியும் ரசாயன கிடங்கு; தீயை அணைக்க போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் ரவுண்டானா பகுதியில் ரசாயன கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் ரவுண்டானா பகுதியில் அமைந்துள்ள ரசாயன கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் அதிகளவில் கரும்புகை வெளியேறுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதியிலிருந்து மக்களை அப்புறப்படுத்தி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்களில் தீயை அணைக்க முயன்று வருகின்றனர்.