1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 1 நவம்பர் 2017 (18:47 IST)

ஏரி தூர்வாரப்படுகிறதா? கஜானா தூர்வாரப்படுகிறதா? மு.க.ஸ்டாலின் ஆவேசம்

கடந்த சில மாதங்களாக ஏரியை தூர்வாரியதாக சொல்லி கொண்டிருக்கும் தமிழக அமைச்சர்கள் உண்மையில் ஏரியை தூர்வாரினார்களா? அல்லது கஜானாவை தூர்வாரினார்களா? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.



 
 
ஏரிகள் சரியான முறையில் தூர்வாரப்பட்டிருந்தால் இரண்டு நாள் மழைக்கே இந்த நிலைமை எப்படி வந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ள மு.க.ஸ்டாலின், ஏரிகள் தூர்வாரியது குறித்தும் அதற்கான செலவுகள் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்
 
தமிழக அரசு மழை முன்னெச்சரிக்கை விஷயத்தில் காட்டிய அலட்சியம் காரணமாகத்தான் கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் பலியாகியுள்ளதாகவும், அந்த பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்தும் அரசின் அலட்சியத்தால் இரண்டு பிஞ்சு உயிர்கள் பலியானது அதிர்ச்சியை அளிப்பதாகவும் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்துள்ளார்