வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஜனவரி 2018 (10:19 IST)

ஈரோட்டில் திமுக மாநாடு : ரஜினிக்கு எதிராக களம் இறங்கும் ஸ்டாலின்?

ஈரோட்டில் திமுக தரப்பில் விரைவில் மாபெரும் மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

 
அரசியலில் இறங்கவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும், ஆன்மீக அரசியலை அவர் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தனிக்கட்சி தொடங்கி, வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக ரஜினி அறிவித்துள்ளார். மேலும்,  பாராளுமன்ற தேர்தலின் போது தனது கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை அறிவிப்பதாக கூறியுள்ள ரஜினி, திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.
 
பொதுவாக முக்கிய நபர்கள் வீட்டிற்கு வந்தால் வீட்டிற்கு வெளியே வந்து வரவேற்கும் ஸ்டாலின், ரஜினியை வீட்டிற்குள் இருந்தவாரே வரவேற்றாராம். மேலும், கோபாலபுரம் இல்லத்தில் இருந்தவரை ரஜினியும், ஸ்டாலினும் அரசியல் பற்றி பெரிதாக எதுவும் பேசிக்கவில்லை. கருணாநிதியிடம் சில நிமிடங்கள் பேசிய ரஜினி அங்கிருந்து கிளம்பி சென்றார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அரசியல் கட்சி தொடங்க இருப்பதால் கருணாநிதியிடம் ஆசி பெற்றதாகவும், ஸ்டாலினிடம் எதுவும் பேசவில்லை எனவும் கூறினார்.
 
இந்நிலையில், ரஜினியின் அரசியல் நகர்வை ஸ்டாலின் ரசிக்கவில்லை எனவும், இனிமேல், அவரின் நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும் என திமுகவினர் கூறி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, ரஜினி முன்னெடுக்கும் அரசியல் ஆன்மீகத்திற்கு எதிராக, ஆன்மீகத்தை கடுமையாக எதிர்த்த பெரியார் பிறந்த ஈரோட்டில் விரைவில் திமுக தரப்பில் மாநாட்டை நடத்த ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.