கருணாநிதிக்கு லண்டன் டாக்டர்: மு.க.அழகிரி ஏற்பாடு?

Last Updated: புதன், 1 ஆகஸ்ட் 2018 (16:26 IST)
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஐந்து நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு லண்டன் டாக்டர் ஒருவரை மு.க.அழகிரி ஏற்பாடு செய்திருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன
காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றே மதுரையில் இருந்து சென்னை வந்துவிட்ட மு.க.அழகிரி, தினமும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார்.

Karunanidhi
இந்த நிலையில் தனது டாக்டர் நண்பர் ஒருவரின் மூலம் கருணாநிதியின் மருத்துவ அறிக்கைகளை லண்டன் டாக்டர் ஒருவரிடம் மு.க.அழகிரி ஆலோசனை செய்து வருவதாகவும், விரைவில் லண்டன் டாக்டர் சென்னை வரவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். மேலும் கனிமொழி தவிர ஸ்டாலின் உள்பட அனைவரிடமும் மு.க.அழகிரி சற்று ஒதுங்கியே இருப்பதாகவும், இருப்பினும் கருணாநிதி குணமடைய வேண்டும் என்பதில் அவர் மற்றவர்களை விட தீவிர அக்கறை செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :