அரபிக்கடலில் உருவானது லூபன் புயல்
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை 24 மணிநேரத்துக்குள் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் இன்று வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக மாறும் எனவும். அந்த புயல் 24 மணி நேரத்தில் ஒடிசா நோக்கி நகர்ந்து கரையேறும் எனவும் வானிலை ஆய்வு மையம் இன்று அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த் வானிலை ஆய்வு மைய அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்தாவது ‘வடகிழக்குப் பருவமழை பெய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புயல் கரையைக் கடந்த பின் நாளை முதல் தமிழகத்தில் மழை படிப்படியாகக் குறையும்’ எனத் தெரிவித்தார்.
மேலும் அரபிக்கடலில் லூபன் என்ற புயல் உருவாகி உள்ளதாகவும் அது ஓமன் கடற்கரையை நோக்கி நகரும் எனவும் அறிவித்துள்ளார். எனவே தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.