புதிய மோட்டார் வாகன சட்டம் – லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் !
புதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் அதிக அபராதம் விதிக்கப்படுவதை அடுத்து லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தத்தை அறிவித்துள்ளது.
திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் ஏற்கனவே நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து புதிய மோட்டார் வாகன சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விதி மீறலில் ஈடுபடுவோர்க்கு முன்னர் இருந்த அபராதத் தொகையை விட 10 மடங்கு அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. உதாரணமாக லாரி ஓட்டுனர் ஒருவருக்கு 86,000 ரூபாய் அபராதமும் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் லுங்கி அணிந்து ஓட்டியதற்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதும் பரவலாக கண்டனங்களை எழுப்பியுள்ளன.
ஏற்கனவே டீசல், பெட்ரோல் விலை உயர்வால் அவதிப்பட்டு வரும் லாரி உரிமையாளர்கள் இப்போது இந்த அபராதங்களால் மேலும் கஷ்டங்களை அனுபவிப்பதாகக் கூறி இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 45 லட்சம் லாரிகள் இயக்கப்படாமல் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.