செவ்வாய், 19 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 14 டிசம்பர் 2016 (20:42 IST)

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - லாரி டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை

கரூரில்,  4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த லாரி டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் 2 ஆயிரம் அபராதம் விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.


 
கரூர் அருகே உள்ள தாந்தோன்றிமலை பகுதியில் உள்ள வ.உ.சி தெருவை சார்ந்தவர் பூபதி, இவருடைய மனைவி ராஜேஸ்வரி, இவருடைய மகள் 4 வயது சிறுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), அங்குள்ள தனியார் பள்ளியில் பிரி. கே.ஜி படித்து விட்டு, கடந்த 2015 ம் வருடம் ஜூலை மாதம் 6 ம் தேதி மாலை வீடு திரும்பி கொண்டிருந்தாள்.
 
அப்போது,அதே பகுதியை சார்ந்த லாரி டிரைவர் மணிமாறன் (வயது 44),   என்பவர் சிறுமி என்றும் பாராமல் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். 
 
இதுகுறித்து, கரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தாய் ராஜேஸ்வரி புகார் அளித்தார். இது குறித்த வழக்கு இன்று கரூர் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிபதி குணசேகரன் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 2 ஆயிரம் அபராதமும், விதித்து தீர்ப்பளித்தார். மேலும் குற்றவாளி மணிமாறனை திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்