1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (21:45 IST)

கருணாநிதி பிறந்தநாளில் சிறைக்கைதிகள் விடுதலை: விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தல்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் நீண்டகாலமாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
 
கொரோனா தொற்றின் நெருக்கடிகளை கருத்தில்கொண்டு சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உரிய வழிகாட்டுதலை வழங்கி உள்ளதாகவும் இதனை ஏற்கனவே 7 தமிழர் விடுதலை குறித்த வேண்டுகோளிலும் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பெண் கைதிகள் விசாரணை கைதிகள் போன்றவர்களையும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி விடுதலை செய்யவேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
ஜூன் மூன்றாம் தேதி கருணாநிதி பிறந்தநாளை ஒட்டி நெடுங்காலமாக சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என திருமாவளவனின் வேண்டுகோளை முதல்வர் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்