புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (12:19 IST)

மறைமுக தேர்தல் நிலவரம்: ஒன்றியங்களில் அதிமுக முன்னிலை!

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் ஒன்றிய பகுதிகளில் அதிமுக பெருவாரியான இடங்களில் தலைவர் பதவியை பிடித்துள்ளது.

தமிழக ஊராட்சி உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. வாக்கு எண்ணும் பணிகள் முடிந்து கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது.

தற்போதைய நிலவரப்படி 314 ஒன்றிய தலைவர் பதவிகளில் அதிமுக 47 இடங்களையும், திமுக 21 இடங்களையும் பெற்றுள்ளன. ஒன்றியத்தில் அதிமுக கை ஓங்கியிருப்பதாக தெரிகிறது. 27 மாவட்ட ஒன்றிய பதவிகளில் 8 இடங்களில் அதிமுகவும், 7 இடங்களில் திமுகவும் தலைவர் பதவிகளை பெற்றுள்ளன.

மேலும் பல்வேறு ஒன்றிய பகுதிகளில் அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் ஏற்பட்டு வருவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.