டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்..
டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகள் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் டிசம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் ஜனவரி 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.
வேட்பு மனு தாக்கல் 6 ஆம் தேதி தொடங்கும் எனவும், ஜனவரி 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் செய்ய டிசம்பர் 13 கடைசி நாள் எனவும், வேட்பு மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 18 கடைசி நாள் எனவும் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை