ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (14:14 IST)

"ஜன கண மன இனிமேதான் பாடுவோம்".! ஆளுநரை கிண்டலடித்த சபாநாயகர் அப்பாவு..!!

tn assembly
சட்டப்பேரவையில் இருந்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி வெளியேறும் போது, ஜன கண மன இனிமேதான் பாடுவோம்  என்று சபாநாயகர் அப்பாவு கிண்டலாகக் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை. 
 
அப்போது சட்டப்பேரவை கூட்டத்தின் தொடக்கத்திலும், இறுதியிலும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார்.
 
ஆளுநர் படிக்காத உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார். ஆளுநர் ஆர். என். ரவி வாசிக்காத உரையை சட்டப்பேரவைக் குறிப்பில் முழுவதுமாக பதிவிடவும், ஆளுநருக்கு எதிராகவும் அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். 


இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனால் சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். அப்போது ஜன கண மன இனிமேதான் பாடுவோம்  என்று சபாநாயகர் அப்பாவு கிண்டலாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.