1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 12 பிப்ரவரி 2024 (06:43 IST)

இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. ஆளுநர் உரையாற்றுகிறார்..!

assembly
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவையின் அலுவலக குழு கூடி எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்துடன் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது  

மேலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்துக் தீர்மானத்தின் மீது மூன்று நாட்கள் விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 19ஆம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது

இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் காரசாரமான விவாதத்துடன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva