மது ஒழிப்பு மாநாடு நடத்துவதாக வி.சி.க திருமாவளவன் அறிவித்துள்ள நிலையில் இது திட்டமிட்ட நாடகம் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மது ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ள நிலையில் திமுக உள்ளிட்ட பல கட்சிகள் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வதாக அறிவித்து வருகின்றன. இந்நிலையில் இந்த மது ஒழிப்பு மாநாடு குறித்து பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் “முதல்வர் மு.க.ஸ்டாலினும், திருமாவளவனும் திட்டமிட்டு மதுவிலக்கு குறித்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க பயணம் தோல்வியை மறைக்கவும், அதை பற்றி மக்கள் கேள்வி கேட்காமல் இருப்பதற்காகவும் இந்த மது ஒழிப்பு மாநாடு நாடகத்தை நடத்துகின்றனர். முதலமைச்சரின் தூண்டுதலின் பேரில் திருமாவளவன் மக்களை திசை திருப்புகிறார்” என பேசியுள்ளார்.
மேலும் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாததை குறிப்பிட்டு பேசிய அவர், விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என நம்பிக்கையில்லை என்றும் கூறியுள்ளார்.
Edit by Prasanth.K