1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 21 ஜூலை 2023 (13:02 IST)

நடிகர் சூர்யாவின்' கங்குவா' பட புதிய போஸ்டர் ரிலீஸ்

kanguva
நடிகர் சூர்யாவின்' கங்குவா' பட புதிய போஸ்டர்  வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா . இவர் தற்போது சிறுத்தை சிவா  இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில்  நடித்து  வருகிறார்.  வித்தியாசமான கதை பின்னணியுடன் இப்படம் அமைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் வில்லனாக நடிகர் நட்டி நடராஜ் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
தனுஷின் கர்ணன் படத்தைத் தொடர்ந்து நட்டி நடராஜ் இப்படத்திலும் வில்லனாக நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தது.  தமிழ் சினிமாவில் பிரமாண்ட பஜெட்டில்,  3டி தொழில்நுட்பம் மற்றும் 10 மொழிகளில்  இப்படம் உருவாகி வருகிறது.

இந்த   நிலையில், கங்குவா படத்தை தயாரித்து வரும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ#GlimpseOfKanguva , வரும் ஜூலை 23 ஆம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என்ற தகவலை உறுதி செய்தது.

இந்த  நிலையில், படக்குழு கங்குவா படத்தின் சூர்யா பட புதிய போஸ்டரை ரிலீஸ் செய்துள்ளது. இதில்,  குதிரையின் மீது அரசன் போன்று  கம்பீரமான தோற்றத்துடன் சூர்யா அமர்ந்திருக்கும் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ள்து. இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.