1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 மே 2023 (07:43 IST)

5 ஆண்டு சட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கடைசி தேதி, இணையதளம் அறிவிப்பு..!

ஐந்தாண்டு கால சட்டப் படிப்புகளுக்கு மே 15ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சட்ட பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 
மே 15ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை ஐந்தாண்டு கால சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் tndalu.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது 
 
மேலும் 3 ஆண்டுகால சட்டப் படிப்பு மற்றும் சட்ட மேற்படிப்புகளுக்கு விண்ணப்பம் வழங்கும் தேதி இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் சட்டப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 
 
சட்ட படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் மே 15 ஆம் தேதி முதல் மேற்கண்ட இணையதளத்தில் விண்ணப்பம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தற்போது B.A.L.L.B (Hons.) Degree Hourse , B.B.A (Hons.) Degree Hourse , B.COM (Hons.) Degree Hourse , , B.C.A (Hons.) Degree Hourse, ஆகிய ஐந்து படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva