பொதுமக்களை தாக்கும் மாடுகள்! 3 ஆயிரம் மாடுகளை பிடித்த சென்னை மாநகராட்சி!
சமீப காலமாக சென்னையில் பொதுமக்களை மாடுகள் தாக்கும் சம்பவம் அதிகமானதை தொடர்ந்து இதுவரை 3 ஆயிரம் மாடுகள் மாநகராட்சியால் பிடிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாடுகள் பல அதன் உரிமையாளர்களால் சரியாக பராமரிக்கப்படாமல் சாலைகளில் சுற்றி வருவது அதிகமாக உள்ளது. இதனால் மாடுகள் போக்குவரத்திற்கு இடையூறாக இருப்பதுடன், சில சமயங்களில் பொதுமக்களை தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.
இதனால் சென்னை மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக திரியும் மாடுகளை பிடிக்கவும், அதன் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பல பகுதிகளில் மாடுகள் பிடிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின் படி, இதுவரை பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த 3,859 மாடுகள் பிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K