1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 9 டிசம்பர் 2021 (10:31 IST)

ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி 19 வினாடிகள்: திக் திக் வீடியோ!

குன்னூரில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டரின் கடைசி 19 வினாடிகள் வீடியோ வெளியாகி உள்ளது. 

 
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று விபத்துக்கு உள்ளானதில் ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் பலியாகினர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் உள்ள கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் பணி நேற்று நள்ளிரவு வரை நடந்து கொண்டிருந்த நிலையில் அந்த கருப்பு பெட்டி கண்டறியப்பட்டுள்ளது. 
 
ராணுவ அதிகாரிகள் அந்த கருப்பு பெட்டியை எடுத்துச் சென்று ஆய்வு செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கருப்பு பெட்டியில் விமானியின் கடைசி உரையாடல் இருக்கும் என்பதால் ஹெலிகாப்டர் விபத்து காரணம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் கடைசி 19 வினாடிகள் வீடியோ வெளியாகி உள்ளது. 
 
வெளியாகி உள்ள அந்த வீடியோவில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர் பனி மூட்டத்திற்குள் சென்று மறையும் காட்சிகள் தெளிவாக பதிவாகி உள்ளது. எனவே பனி மூட்டத்தால் ஹெலிகாப்டர்  மரத்தின் கிளை மீது மோதி நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டிருக்கும் என கணிக்கப்படுகிறது. 
 
இருப்பினும் கருப்பு பெட்டியில் விமானியின் கடைசி உரையாடல் கிடைத்தால் விபத்துக்கான காரணம் தெரியவரும்.