1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 12 அக்டோபர் 2019 (13:10 IST)

சீனாவுடன் பேச்சுவார்த்தையில் கூட தமிழிலேயே பேசும் மோடி!

இன்று சீன – இந்திய அதிகாரிகள் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை கூட்டத்திலும் பிரதமர் மோடி தமிழில் பேசியுள்ளார்.

சீன அதிபர் சின்பிங் மற்றும் பிரதமர் மோடி சந்திக்கும் இரண்டாவது உச்சி மாநாடு நேற்று முதல் மகாபலிபுரத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மகாபலிபுரம் புராதன சின்னங்களை சுற்றிப்பார்த்த இரு தலைவர்களும் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். அதற்கு பிறகு இன்று சீன – இந்திய அதிகாரிகள் பங்கு பெறும் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

இதில் அதிகாரிகளிடம் பேச தொடங்கிய பிரதமர் ’மதிப்பிற்குரிய விருந்தினரை வரவேற்கிறேன்’ என தமிழில் பேசினார். பிறகு அதிகாரிகளிடையே இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மற்றும் மேம்படுத்துதல் குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தை முடிந்ததும் சீன அதிபர் விமான நிலையம் சென்று அங்கிருந்து சீனா திரும்புகிறார்.